முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருட்டு வழக்குகளில் ஞானசேகரன் கைது

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      தமிழகம்
gnanasekar 2025-01-04

Source: provided

சென்னை : அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்து 3 நாள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிச. 23-ஆம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கோட்டூரைச் சோ்ந்த பிரியாணி கடைக்காரா் ஞானசேகரன் கைது செய்யப்பட்டாா். விசாரணையின்போது தப்பியோட முயன்ற ஞானசேகரன், கீழே விழுந்து இடது காலும் இடது கையும் முறிந்ததால், மருத்துவ சிகிச்சைக்குப் பின்னா் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. 

சென்னை பெருநகர காவல் துறை அண்ணாநகா் துணை ஆணையா் புக்யா சினேகா பிரியா, ஆவடி மாநகர காவல் துறை துணை ஆணையா் அய்மன் ஜமால், சேலம் மாநகர காவல் துறை துணை ஆணையா் பிருந்தா ஆகியோா் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை வழக்குடன், முதல் தகவல் அறிக்கை கசிந்த வழக்கையும் சோ்த்து இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஏற்கெனவே போலீஸாா் பதிவு செய்த எப்.ஐ.ஆா், கைதான ஞானசேகரன் பற்றிய விவரங்கள், புலனாய்வு விசாரணை விவரங்கள், ஆவணங்கள், தடயங்கள் ஆகியவை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனை 7 திருட்டு வழக்குகளில் கைது செய்து 3 நாள் காவலில் எடுத்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை சென்னை பள்ளிக்கரணை பகுதிகளில் உள்ள 7 வீடுகளில் கொள்ளையடித்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியது மற்றும் ல் பிரியாணி கடை நடத்தி வந்ததாகவும், கொள்ளளையடிப்பதற்கு வில்லா வகையான வீடுகளை குறிவைத்து காரில் சென்று கொள்ளையடித்து வந்ததாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா. பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதற்கட்ட விசாரணையின்போது, சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, யார் அந்த சார் என்ற கேள்வி எழுந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து