முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பகவத் கீதை மீது பிரமாணம் செய்து எப்.பி.ஐ. புதிய இயக்குநராக பதவியேற்றார் காஷ் படேல்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      உலகம்
Kash-Patel 2025-02-21

Source: provided

அமெரிக்கா : அமெரிக்க எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக்கொண்டார்.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றபின்னர் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அந்தவகையில் அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் என்பவரை நியமித்தார். காஷ் படேல் வலிமையானவர் என்றும் அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் காஷ் படேல் அதிகாரப்பூர்வமாக எப்.பி.ஐ. இயக்குநராக நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் பாண்டி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். காஷ் படேல் 10 ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

எப்.பி.ஐ. மேலும் வெளிப்படையாக இருக்க முயற்சிப்பேன் என்றும் அமெரிக்காவுக்கு எதிரானவர்கள் மீது எப்.பி.ஐ. நடவடிக்கை எடுக்கும் என்றும் காஷ் படேல் கூறியுள்ளார். கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றது காஷ் படேல் மட்டுமல்ல. முன்னதாக இந்திய வம்சாவளி சுகாஷ் சுப்பிரமண்யமும் கீதையை வைத்து பதவியேற்றுள்ளார். சுகாஷ், இந்த முறை தேர்தலில் விர்ஜினியாவில் ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். காஷ் படேலின் பெற்றோர்கள் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இவர் நியூயார்க், கார்டன் சிட்டியில் 1980-ல் பிறந்தார். ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தின் இளங்கலை படிப்பும் பேஸ் சட்டப்பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கிய அவர் அமெரிக்க அரசில் பல உயர் பதவிகளில் இருந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து