முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் மட்டுமே நிறைவேற்றம்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      தமிழகம்
Ops 2024-12-13

சென்னை, தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக  முதல்வர் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்  என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்து இருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் ஆகும்.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, 505 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையின்மூலம் தி.மு.க. அறிவித்திருந்தது. இதில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மொத்த வாக்குறுதிகளில் 20 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டு 90 விழுக்காடு நிறைவேற்றிவிட்டதாகக் கூறுவது ஜமக்காளத்தில் வடிகட்டின பொய். நிறைவேற்றப்பட்ட பல வாக்குறுதிகளும் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன.  நகைக் கடன் ரத்து என்று சொல்லிவிட்டு, 35 இலட்சம் பேருக்கு அது மறுக்கப்பட்டு இருக்கிறது. சில வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்குப் பதிலாக அதற்கு முற்றிலும் எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மாதம் ஒரு முறை மின் கட்டணம் என்று சொல்லிவிட்டு, மின் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஏற்கெனவே நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், இருசக்கர வாகன மானியத் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவை முடக்கப்பட்டுள்ளன. பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாற்றங்களை ஆய்வு செய்து வருவதாக முதல்வர்  தெரிவித்து இருக்கிறார். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கூடுதல் வரிகளை விதித்து மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது.

உண்மை நிலை இவ்வாறிருக்க, 90 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றுவிட்டதாக முதலமைச்சர் கூறுவது மக்களை ஏமாற்றும் செயல். முதலமைச்சரின் கூற்றில் உண்மை இருப்பின், தி.மு.க.வின் 505 வாக்குறுதிகள் மற்றும் அவை நிறைவேற்றப்பட்டதற்கான ஆணைகள் அடங்கிய ஒரு வெள்ளை அறிக்கையினை தி.மு.க. அரசு வெளியிட வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து