முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு: பயணிகள் கடும் அதிருப்தி

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      தமிழகம்
Waiting-list 2023-11-17

Source: provided

சென்னை : நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளதற்கு பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்..

நாடு முழுவதும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகளில் நிற்பதற்குகூட இடமில்லாத காரணத்தால், முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டை வாங்கும் பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் நின்றுகொண்டும், வழியில் அமர்ந்தும் பயணம் செய்து வருகிறார்கள். கடந்த சில நாள்களாக பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடமில்லாததால் அதிகளவிலான பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் பயணித்து வருகின்றனர்.

இதனிடையே, முன்பதிவு மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் பயணிப்பவர்கள் கூட்டத்துக்கு அஞ்சி கதவுகளை மூடிக் கொள்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் ரயில்களை சேதப்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில், 26 ரயில்களின் (இரு வழித்தடத்தில்) முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு மாற்றாக மூன்று அடுக்கு குளிர்சாதன பெட்டிகளை இணைக்கவுள்ளதாக பிப். 15ஆம் தேதி தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. நேற்று  முதல் அமலுக்கும் வந்துள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களின் முன்பதிவில்லா பெட்டிகள்  நேற்று  முதல் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை - மைசூரு காவேரி விரைவு ரயில், சென்னை - திருவனந்தபுரம் மெயில், சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா அதிவிரைவு ரயில், கொச்சுவேலி - நிலம்பூர் சாலை ராஜ்ய ராணி விரைவு ரயில் மற்றும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில்களின் நான்கு முன்பதிவில்லா பெட்டிகள் இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை - ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - ஹைதராபாத் டெக்கான் அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் அதிவிரைவு ரயில், புதுச்சேரி - மங்களூரு சென்ட்ரல் விரைவு ரயில், விழுப்புரம் - காரக்பூர் அதிவிரைவு ரயில், புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் - பாலக்காடு விரைவு ரயில் மற்றும் திருநெல்வேலி - புருலியா அதிவிரைவு ரயில் ஆகிய 8 ரயில்களில் (இரு வழித்தடத்தில் 16) உள்ள முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட புதிய ரயில்வே கொள்கையின் அடிப்படையில், ஒரு ரயிலுக்கு அதிகபட்சமாக இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைபடி குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டதன் விளைவாக இரவு நேரங்களில் முன்பதிவு பெட்டிகளில் அதிகளவிலான மக்கள் ஏற நேரிடும் என்று அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து