முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாதனையை முறியடித்த ஷமி

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2025      விளையாட்டு
Mohammed-Shami 2024 07 24

Source: provided

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, வங்கதேசம் அணிகள் நேற்று முன்தினம் மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேசம் 49.4 ஓவரில் 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து ஆடிய இந்தியா 46.3 ஓவரில் 231 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில், ஐசிசி தொடரில் (ஒருநாள் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) முகமது ஷமி 19 இன்னிங்சில் மொத்தம் 60 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர் கானை (32 இன்னிங்சில் 59 விக்கெட்டுகள்) பின்னுக்குத் தள்ளி ஷமி முதலிடம் பிடித்துள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ஜவகல் ஸ்ரீநாத் (47 விக்கெட்), ஜடேஜா (43 விக்கெட்) ஆகியோர் இருக்கின்றனர்.ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2016, 2017 ஆண்டுகளை தவிர, 2021 வரை விளையாடியவர் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. ஐ.பி.எல். வரலாற்றில் மிகச் சிறந்த அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் உருவெடுத்ததில் ரெய்னாவின் பங்கு மறுக்க முடியாதது. மூன்றாவது வீரராக களமிறங்கும் இடது கை பேட்டராக ரெய்னாவின் அதிரடி, சென்னைக்கு எதிராக விளையாடும் அணிக்கு பெரும் தலைவலியாக இருந்தது. ஐ.பி.எல். தொடரில் 205 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா ஒரு சதம், 39 அரைசதங்கள் உள்பட 5,528 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

__________________________________________________________________________________________________

மீண்டும் சி.எஸ்.கே.வில் ரெய்னா

ரசிகர்களால் மிஸ்டர் ஐ.பி.எல்., சின்ன தல என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் ரெய்னா, ஐ.பி.எல். வரலாற்றில் அதிக கேட்ச் (108) பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஸ்வின் திரும்பியுள்ள நிலையில், ரெய்னாவும் அணியுடன் இணைவது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

_________________________________________________________________________________

நூலிழையில் உயிர்தப்பிய கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி  பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுகொண்டிருந்தார். துர்காபூர் விரைவுச் சாலையில் கங்குலியின் கார் சென்றுகொண்டிருந்தபோது, தாதுபூர் அருகே வேகமாகச் சென்றுகொண்டிருந்த லாரியின் ஓட்டுநர் திடீரென்று பிரேக் பிடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. லாரி மீது மோதாமல் இருப்பதற்காக கங்குலியின் கார் ஓட்டுநரும் பிரேக் பிடித்ததில், அவரது காரைத் தொடர்ந்து வந்த இரு கார்களும் ஒன்றோடுஒன்று மோதி விபத்தில் சிக்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் கார்கள் மட்டுமே சேதமடைந்ததாகவும் யாருக்கும் பெரிதளவிலான காயங்கள் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  விபத்தில் சிக்கிய கங்குலி, 20 நிமிடங்களில் வேறொரு காரில் புறப்பட்டு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுடன் உரையாடினார்.

_________________________________________________________________________________

ஐ.பி.எல். தொடரில் கம்மின்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2025 கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். மெகா ஏலத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. இந்த தொடருக்கான அட்டவணை சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. அதன்படி மார்ச் 22-ம் தேதி தொடங்கி மே 25-ந் தேதி முடிகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது.

இந்த தொடரில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் களமிறங்க உள்ளார். இந்திய அணிக்கு எதிரான தொடர் முடிந்த பிறகு காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் பங்கேற்வில்லை. இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகினார். அவருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். கம்மின்ஸ் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் மற்றும் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை பயன்படுத்த உள்ளதாகவும் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து