முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் வீரருக்கு ரசிகர்கள் கண்டனம்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2025      விளையாட்டு
Afghanistan 2024-06-25

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்கரமை ஆப்கானிஸ்தான் வீரர்  பஸல்ஹக்  பரூக்கி தள்ளியதுக்கு முன்னாள் வீரர் கடுமையாக கண்டித்துள்ளார்.

கோபமாக தள்ளினார்...

சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மோதின. இதில் தெ.ஆ. 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் தெ.ஆ. பேட்டிங் ஆடியபோது 49.1ஆவது பந்து விளையாடியபோது ரன் ஓடி வந்து கிரீஸின் மறுபக்கத்துக்கு நடந்து சென்ற மார்கரமை  பஸல்ஹக்  பரூக்கி கோபமாக தள்ளினார். இதற்கு மார்க்ரம் அமைதியாக பேட்டைக் காண்பிக்க  பஸல்ஹக்  பரூக்கி சிரிப்பதுபோல் கடந்து சென்றார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகியுள்ளது.

வர்ணனையாளர்கள் குழப்பம்...

இந்த நிகழ்வின்போது வர்ணனையாளர்களாக இருந்த பொல்லாக், மபாங்வா இதைக் குறித்து பேசினார்கள். மபாங்வா: இது நட்பு ரீதியாக நடந்ததா இல்லையா என்பது அதிசயமாக இருக்கிறது. அநேகமாக நட்புறவினால் ஏற்பட்டதாக இருக்கும். பொல்லாக்: அப்படியா? இது நட்பினால் ஏற்பட்ட மாதிரி இல்லை. மபாங்வா: தெரியவில்லை. அப்படியில்லாமல் எப்படி இப்படி செய்ய முடியும்? என்றார்.

ரசிகர்கள் கண்டனம்...

சன்ரைசரஸ் அணியின் இருவரும் ஒன்றாக விளையாடுகிறார்கள். அதேசமயத்தில் சமீபத்தில்  பஸல்ஹக்  பரூக்கிக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது. வெட்கக்கேடு, பஸல்ஹக் பரூக்கிக்கு அபராதம் விதிக்க வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 5 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 4 hours ago
View all comments

வாசகர் கருத்து