முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்பத்தில் மோதிய விமானம்: பயணிகள் உயிர்தப்பினர்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

பெங்களூர், செப். 14  - பெங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஓடிய விமானம் விளக்கு கம்பத்தில் மோதியது. இதில் பயணம் செய்த 116 பயணிகளும் காயமின்றி உயிர்தப்பினர். டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பெங்களூர் புறப்பட்டது. அதில் 110 பயணிகளும், 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர். இரவு 8.10 மணிக்கு பெங்களூர் சர்வதேச விமான நிலையம் வந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கும் போது அதன் சக்கரங்கள் மழையால் வழுக்கியதால் ஓடுபாதையை விட்டு விலகி ஓடி அருகில் இருந்த விளக்கு கம்பங்கள் மீது மோதி நின்றது. இதனால் விமானம் பயங்கரமாக குலுங்கியது. உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அதிர்ஷ்டவசமாக விமானம் சேதமடையவில்லை. விமானத்தில் இருந்த அனைவரும் காயமின்றி தப்பினர். அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து அவசரமாக இறங்கி ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமான விபத்து நடந்ததும் ஓடுதளம் மூடப்பட்டது. அது பிஸியான நேரம் என்பதால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. புறப்பட இருந்த 24 விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. சேதமடைந்த விளக்கு கம்பங்கள் உடனடியாக சரி செய்யப்பட்டன. கொல்கத்தாவில் இருந்து பெங்களூர் சென்ற விமானத்தில் மிசோராம் மாநில கவர்னர் வைக்கம் புருஷோத்தமன் இருந்தார். அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. பெங்களூர் ஓடுபாதை சரி செய்யப்பட்ட பிறகு ஒவ்வொரு விமானமாக சென்னை, கொச்சி, கோவை, டெல்லி, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்டு சென்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago