எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்’ என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 மாநிலங்களை...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்றக் கூட்டம் நிறைவடைந்தது.
விரிவாக விவாதிக்க...
பின்னர், திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துப் பேசினார். அதன் விவரம்: மத்திய அரசு தொகுதி மறுவரையறை மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்பினரை உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் விரிவாக விவாதிக்க வேண்டும். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்.
சட்டத்திருத்தத்தை...
மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. இதை உறுதி செய்ய தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறை தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ள, கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மையக் குழு, பாராளுமன்ற உத்திகளை ஒருங்கிணைத்து செயல்படும்.
மாநில மக்களிடம்...
நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, பாராளுமன்றக் குழு பிரதமரைச் சந்தித்து, இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்கும். கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு தெரிவிப்பர். கடந்த காலத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த தொகுதி மறுவரையறை விவரங்கள் மற்றும் மத்திய அரசு தற்போது மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களை அந்தந்த மாநில மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
பரவலாக வரவேற்பு...
மேலும் அவர், “இந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் வரமுடியாத சூழ்நிலை. அவர்கள் பங்கேற்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடந்துள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறைக்காக அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். கூட்டு நடவடிக்கைக் குழுவில் பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு...
பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டபோது, தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான், மகளிர் மசோதா நடைமுறைக்கு வரும் என தெளிவாகக் கூறினா். ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரம் பெற்றது பாராளுமன்றம். அங்கு, கட்டாயம் தொகுதி மறுவரையறை செய்யப்படும். அதன்பிறகு 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், அண்மையில் உள்துறை அமைச்சர் தமிழக வருகையின்போது, தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படாது என்று தெரிவித்திருக்கிறார்.
உரிமைகளை கேட்கிறோம்...
தொகுதி மறுவரையறை குறித்து எவ்வித தெளிவையும் ஏற்படுத்தாமல், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதால்தான், ஒரு தெளிவான பதிலை மத்திய அரசு தர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நாங்கள் எங்களுக்கான உரிமைகளை கேட்கிறோம். இது எந்த மாநிலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. நான் என்னுடைய உரிமையைக் கேட்பது என்பது, உங்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று அர்த்தமில்லை. மத்திய அரசின் இந்த அநீதியால், ஒருசில மாநிலங்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, நாங்கள் சரியான தொகுதி மறுவரையைறைக் கோருகிறோம் என்று கனிமொழி தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
1) கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்.
2) தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
3) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
4) கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.
5) பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ்.
6) பிஜூ ஜனதா தளம் - சஞ்சய் குமார் தாஸ் பர்மா.
7) பிஜூ ஜனதா தள கட்சி - அமர் பட்நாயக்.
8) பஞ்சாப் சிரோன்மணி அகாலி தளம் - பல்வீந்தர் சிங்.
9) கேரள இ.கம்யூ. மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம்.
10) கேரள இ.யூ.மு.லீக் - மாநில பொதுச்செயலாளர் சலாம்.
11) கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி - பிரேம சந்திரன்.
12) கேரள இ.தே.காங். மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன்.
13) தெலங்கானா அகில இ.மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் - இம்தியாஸ் ஜலில்.
14) கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி.
15) தெலங்கானா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட்.
160 கேரளா காங்கிரஸ் - பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ்.
நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்
1) மத்திய அரசு தொகுதி மறுவரையறை பணியையும் வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.
2) 1971 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும்.
3) மத்திய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
4) குறிப்பிட்ட மாநிலங்களின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இதுகுறித்த கருத்துகளை எடுத்துரைப்பர்.
5) மேலும் பிரதமர் மோடியிடம் இதுகுறித்து கூட்டாக எம்.பி.க்கள் வலியுறுத்துவார்கள்.
6) அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களைக் கொண்டுவந்து மத்திய அரசுக்குத் தெரிவிப்பர்.
7) தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை மக்களிடையே எடுத்துரைப்போம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்
25 Mar 2025சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஜாகீர் உசேன் கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
25 Mar 2025நெல்லை, ஜாகீர் உசேன் கொலை வழக்கில் தேசிய மனித உரிமை ஆணயைம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருப்பதி கோயிலில் ரூ.5,258 கோடியில் பட்ஜெட்
25 Mar 2025திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் ஆக்கிரமிப்பு பகுதிகளை காலி செய்ய பாக்.கிற்கு இந்தியா வலியுறுத்தல்
25 Mar 2025நியூயார்க், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அதனை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி உள்ளது.
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா போராட்டம்
25 Mar 2025புதுடில்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்க
-
தஞ்சையில் ரம்ஜான் விடுமுறை ரத்து? தமிழக அரசு விளக்கம்
25 Mar 2025சென்னை : தஞ்சை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை விடுமுறையை வேலை நாளாக அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
-
குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றம்
25 Mar 2025புதுடெல்லி : நிதி மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
-
சனிப்பெயர்ச்சி எப்போது? திருநள்ளாறு கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு
25 Mar 2025காரைக்கால், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது என்பதைக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
டி.எஸ்.பி.களுக்கு பதவி உயர்வு வழங்க உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
25 Mar 2025சென்னை : பதவி உயர்வு மூலம் துணை காவல் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்
-
இயக்குநர் பாரதிராஜவின் மகன் நடிகர் மனோஜ் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
25 Mar 2025சென்னை, நடிகரும், இயக்குநருமான மனோஜ் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிர்ப்பு: அலகாபாத் வழக்கறிஞர்கள் போராட்டம்
25 Mar 2025லக்னோ : டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்துள்ளனர்.
-
கனடா தேர்தலில் இந்தியா தலையீடு: அந்நாட்டு உளவு அமைப்பு குற்றச்சாட்டு
25 Mar 2025ஒட்டாவா : கனடா நாட்டின் நாடாளுமன்ற தேர்தலில் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருக்கலாம் என சி.எஸ்.ஐ.எஸ்.
-
ஹூசைனியின் மறைவுக்கு ஆந்திர துணை முதலவர் பவன் கல்யாண் இறங்கல்
25 Mar 2025சென்னை, கராத்தே பயிற்சியாளர் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என்று ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
-
நியூசி.யில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
25 Mar 2025வெல்லிங்டன், நியூசிலாந்து நாட்டின் கீழ் தெற்கு தீவில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ஸ்ரேயாஸ் அதிரடி அரைசதம்
25 Mar 202510 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
-
தெலங்கானா சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உடல் கண்டுபிடிப்பு
25 Mar 2025ஐதராபாத், தெலங்கானா சுரங்க விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
-
வெனிசுலா எண்ணெய் விவகாரம்: டிரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் சிக்கல்
25 Mar 2025வாஷிங்டன், வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 5-வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு
25 Mar 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ. 65,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
இஸ்ரேலில் ஆஸ்கர் வென்ற பாலஸ்தீன இயக்குநர் கைது
25 Mar 2025டெல் அவிவ், ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஒருவர் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
-
அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை விரும்புகின்றனர்: அமைச்சர் ராஜ கண்ணப்பன் தகவல்
25 Mar 2025சென்னை, அமெரிக்கர்கள் ஆவின் நெய்யை தான் அந்த நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
-
ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சிகளாக உயர்த்த நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
25 Mar 2025சென்னை : ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சியை மாநகராட்சிகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் மூச்சுத் திணறி பலி
25 Mar 2025கோவை, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் பலியானார்.
-
சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த சென்னை போட்டிக்கான டிக்கெட்கள்
25 Mar 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.
-
தமிழக அரசியலில் பரபரப்பு இ.பி.எஸ். திடீர் டெல்லி பயணம்
25 Mar 2025புதுடில்லி, பட்ஜெட் கூட்டத்தொடருக்கு இடையே திடீரென அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி பயணம் குறித்து மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
25 Mar 2025சென்னை : தமிழகத்தில் உள்ள 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப் பட உள்ளது.