முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்து: பலி 113 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2025      உலகம்
Suicide 2023 04 29

Source: provided

சாண்டோ டொமிங்கோ: டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட விபத்தில் மாகாண கவர்னர் மரணம் பலி எண்ணிக்கை 113 உயர்ந்துள்ளது.

கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான 'ஜெட் செட்' என்னும் விடுதி அமைந்திருந்தது. இந்த விடுதிக்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். அரசியல் பிரமுகர்கள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நேற்று அதிகாலையில் இசை கச்சேரியில் பொதுமக்கள் திளைத்து கொண்டிருந்த வேளையில் திடீரென விடுதி மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய பலத்த காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். நேற்று காலை நிலவரப்படி 66 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நேற்று மேலும் சிலரின் உடல்கள் மீட்கப்பட்டன. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களிலும் சிலர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்த 160 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து