முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தலைவருக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு: மறுஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டம்?

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      இந்தியா
Murmu 2023 04 18

Source: provided

புதுடெல்லி : மசோ​தாக்​கள் மீது குடியரசுத் தலை​வர் 3 மாதங்​களுக்​குள் முடிவு எடுக்க வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் கிடப்​பில் போட்​டதை எதிர்த்​தும், மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்க கால​வரம்பு நிர்​ணயம் செய்ய கோரி​யும் உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் கடந்த 2023-ம் ஆண்​டில் வழக்கு தொடரப்​பட்​டது. இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜே.பி.பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் அமர்வு கடந்த 8-ம் தேதி தீர்ப்பு வழங்​கியது.

அதில்,  தமிழக அரசின் 10 மசோ​தாக்​களுக்கு ஒப்​புதல் அளிக்​காமல் அவற்றை குடியரசுத் தலை​வருக்கு ஆளுநர் பரிந்​துரை செய்​தது சட்ட​ விரோதம்.  தன்​னிச்​சை​யாக செயல்​பட்டு அவற்றை தடை செய்​வதற்​கான ‘வீட்​டோ’ அதி​காரமோ, நிறைவேற்ற விடா​மல் தடுப்​ப​தற்​கான ‘பாக்​கெட் வீட்டோ’ அதி​காரமோ ஆளுருக்கு கிடை​யாது.  

மாநில ஆளுநர்​கள் அனுப்பி வைக்​கும் மசோ​தாக்​கள் விவ​காரத்​தில் குடியரசுத் தலை​வருக்கு ‘வீட்​டோ’ அதி​காரமோ, ‘பாக்​கெட் வீட்​டோ’ அதி​காரமோ கிடை​யாது.  மாநில ஆளுநர்​கள் அனுப்​பும் மசோ​தாக்​கள் குறித்து 3 மாதங்​களுக்​குள் குடியரசுத் தலை​வர் முடிவு எடுக்க வேண்​டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து சட்ட நிபுணர்​கள் கூறும்​போது, ‘‘வழக்கு விசா​ரணை​யின்​போது, மசோதா குறித்து முடி​வெடுக்க ஆளுநர், குடியரசுத் தலை​வருக்கு காலக்​கெடு நிர்​ண​யம் செய்ய கூடாது என்று மத்​திய அரசின் அட்​டர்னி ஜெனரல் வா​திட்​டார். ஆனால், அவரது கருத்தை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் நிராகரித்​துள்​ளனர். நாட்​டின் வரலாற்​றில் முதல்​முறை​யாக, மசோ​தா குறித்​து முடிவு எடுக்​க கால நிர்​ண​யம்​ செய்​யப்​பட்​டுள்​ளது’’என்​று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உச்ச நீதி​மன்​ற தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து