எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளான இன்று சென்னையில் சமத்துவநாள் விழாவில் ரூ.332.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். ரூ.44 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டிடத்தையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2025 இன்று (ஏப்ரல் 14-ம் தேதியன்று) அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை, எம்.சி. ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் பத்து தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், அம்பேத்கர் பிறந்த இன்று முன்னிட்டு, முதல்-அமைச்சர் தலைமையில் "சமத்துவ நாள்" உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.
தொடர்ந்து, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் 227 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கான 18 விடுதிக் கட்டிடங்கள், 46 பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, 19 சமுதாய நலக்கூடங்கள், 22 கல்லூரி விடுதிகளில் கற்றல் கற்பித்தல் கூடம் மற்றும் 1000 பழங்குடியினர் குடியிருப்புகள் ஆகியவற்றை திறந்து வைக்கவுள்ளார். மேலும் அவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 48,436 பயனாளிகளுக்கு 104 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறவுள்ள சமத்துவ நாள் விழாவில் மொத்தம் 49,542 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 332 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு, கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். மேலும் அவர் தமிழாக்கம் செய்யப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் இரண்டு நூல்களையும், வன உரிமைச் சட்டத்திற்கான வரைபடத்தையும் வெளியிட உள்ளார்.
இவ்விழாவில், பிரகாஷ் அம்பேத்கர் சிறப்புரையாற்ற உள்ளார். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் இதேபோன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
விருதுநகர் அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : விருதுநகர் அருகே காரிசேரி கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.
-
நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை சேனலுக்கும் தொடர்பில்லை: சீமான் பரபரப்பு அறிக்கை
15 Apr 2025சென்னை : நாம் தமிழர் கட்சிக்கும், சாட்டை யூடியூப் சேனலுக்கும் தொடர்பில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 21 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு
15 Apr 2025சென்னை : தமிழகத்தில் ஏப்ரல் 17 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டோனிக்கு கிளார்க் புகழாரம்
15 Apr 2025லக்னோவில் நடைபெற்ற போட்டியில் சி.எஸ்.கே. அணி த்ரில் வெற்றி பெற்றது.
-
தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்
15 Apr 2025லக்னோ : தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல். ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டில் வக்ப் சட்டத்திற்கு எதிரான மனுக்கள் இன்று விசாரணை
15 Apr 2025புதுடெல்லி : வக்ப் வாரிய திருத்தச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று (ஏப். 16) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
-
ஐ.சி.சி.யின் மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கு ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு
15 Apr 2025துபாய் : ஐ.சி.சி.யின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் வென்றுள்ளார்.
-
டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
15 Apr 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு போலீசார், மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட
-
ரூ.70,000-க்கும் கீழ் குறைந்த ஒரு சவரன் தங்கம் விலை..!
15 Apr 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
-
மாநில உரிமைகளை பாதுகாக்க உயர் நிலைக்குழு அமைப்பு : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
15 Apr 2025சென்னை : அடுத்தடுத்து மாநில பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய மத்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது
15 Apr 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
15 Apr 2025புதுடில்லி : 'நேஷனல் ஹெரால்டு' பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக
-
கட்சி வேறுபாடுகளை கடந்து தமிழ்நாட்டு உரிமைகளில் அனைவரும் ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Apr 2025சென்னை : தமிழ்நாட்டு உரிமைகள் என்று வருகிறதோ அந்த நிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கட்சி வேறுபாடுகளை கடந்து ஓரணியில் சேர்ந்து செயலாற்ற வேண்டும் என்று சட்டசபையில் ம
-
மாநில சுயாட்சி தீர்மானம்: பா.ம.க. ஆதரவு - அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. எதிர்ப்பு - வெளிநடப்பு
15 Apr 2025சென்னை : மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு பா.ம.க. ஆதரவு தெரிவித்த நிலையில் எதிர்ப்பு தெரிவித்து அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது.
-
மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
15 Apr 2025சென்னை : மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய 300 ஆன்மிக நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-04-2025
16 Apr 2025 -
201 விக்கெட்களை வீழ்த்தி கீப்பிங்கில் டோனி புதிய சாதனை
15 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம். எஸ். டோனி ஐ.பி.எல். போட்டிகளில் விக்கெட் கீப்பிங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
-
43 வயதில் ஆட்டநாயகன் விருது: ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எம்.எஸ்.டோனியின் சாதனைகள்
15 Apr 2025சென்னை : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
-
சேஸிங்கில் 30 முறை நாட் அவுட்: டோனிக்கு சிறப்பு போஸ்டர் வெளியீடு
15 Apr 2025மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் டோனி படைத்த சாதனைக்கு ஐ.பி.எல். சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
ஆட்ட நாயகன்...
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய்
16 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
-
புதுப்பிக்கப்பட்ட மெரினா கிளை நூலகம்: துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்
16 Apr 2025சென்னை : புதுப்பிக்கப்பட்டுள்ள மெரினா கிளை நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
கருத்தடை செய்த பிறகும் குழந்தை: இழப்பீடு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு
16 Apr 2025மதுரை : கருத்தடை செய்த பிறகும் குழந்தை பிறந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம்; சோதனை முயற்சியாக நடவடிக்கை
16 Apr 2025மும்பை : எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.டி.எம். எந்திரம் வைத்து சோதனை முயற்சியாக ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.
-
மேற்குவங்காளத்தில் வன்முறைக்கு பலியான குடும்பத்திற்கு நிவாரணம் : முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு
16 Apr 2025கொல்கத்தா : கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மத அடையாளங்களை நாங்கள் பார்க்கவில்லை.
-
பா.ஜ.க. தேசிய இளைஞர் பிரிவு தலைவராகிறாரா அண்ணாமலை?
16 Apr 2025சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் பா.ஜ.க.