முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் ஓ.பி.சி. பிரிவில் முஸ்லிம்களை இணைக்க பா.ஜ. எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2025      இந்தியா
Muslim 2023-10-04

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை இணைக்க பா.ஜனதா எதிர்ப்பு  தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது தொடர்பான  அறிக்கை  கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கபட்டது.

 அந்த அறிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும்படி சிபாரிசு செய்திருப்பதற்கான தகவல்கள் வெளியே கசிந்துள்ளது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் லிங்காயத், ஒக்கலிகா உள்ளிட்ட சாதிகளின் இடஒதுக்கீடுவை 32 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயர்த்தும்படி அரசுக்கு ஜெயபிரகாஷ் ஹெக்டே சிபாரிசு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்ட சமுதாய பட்டியலில் முஸ்லிம்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டோராக சேர்த்து சிபாரிசு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இதன்மூலம் கர்நாடகத்தில் அரசியலில் பிரபலமாக இருக்கும் 2 முக்கிய சமுதாயங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமுதாயங்களின் இடஒதுக்கீடும் தலா 3 சதவீதம் அதிகரிக்கும்.  அதுபோல்,  முஸ்லிம்களுக்கு  அவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 4 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஜெயபிரகாஷ் ஹெக்டே சிபாரிசு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துடன் முஸ்லிம்களை சேர்த்திருப்பதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து