முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்: த.வெ.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுடன் காணொளியில் விஜய் கலந்துரையாடல்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      தமிழகம்
Vijay 2024-11-25

Source: provided

சென்னை : தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளிடம் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாடினார்.

நம்முடைய சமூக ஊடகப் படைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று கூறுகின்றனர். நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி என்றாலே நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் இருப்பார்கள் என்று அனைவரும் கூற வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு அனைவருமே வேலை பாருங்கள்.” என்று தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். த.வெ.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நேற்று (ஏப்.19) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம், காணொளியில் தோன்றி, அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: நெட்வொர்க் பிரச்சினை காரணமாகத்தான், பதிவு செய்யப்பட்ட இந்த செய்தியை அனுப்புகிறேன். இதன் மூலமாக உங்கள் அனைவரையுமே சந்திப்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். நம்முடைய இந்த சமூக ஊடகப் படைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று கூறுகின்றனர். இதை நாம் சொல்வதைவிட, மற்றவர்களே அதைப்பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.

இனிமேல் நீங்கள் எல்லாருமே, என்னுடைய சமூக ஊடக ரசிகர்கள் மட்டுமே கிடையாது. என்னைப் பொருத்தவரைக்கும், நீங்கள் அனைவருமே, விர்ச்சுவல் வாரியர்ஸ். இனி நீங்க யாரும் ரசிகர்கள் இல்லை.. நம்ம கட்சியினுடைய விர்ச்சுவல் வாரியர்ஸ். அப்படித்தான் உங்கள் அனைவரையுமே அழைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவ்வாறு அழைப்பது ஓ.கே.தானே, அது பிடித்திருக்கிறது தானே.

நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி என்றாலே நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் இருப்பார்கள் என்று அனைவரும் கூற வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு அனைவருமே வேலை பாருங்கள். கூடிய சீக்கிரமே உங்கள் அனைவரையுமே நான் சந்திக்கிறேன். அதுவரை உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். வெற்றி நிச்சயம். என்று விஜய் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து