முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்காளதேசத்தில் இந்து மத தலைவர் படுகொலை: இந்தியா கடும் கண்டனம்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      இந்தியா
Central-government 2021 12-

புதுடெல்லி, வங்கதேசத்தில் பபேஷ் சந்திர ராய் என்ற இந்து தலைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வங்கதேசத்தில் இந்து சிறுபான்மைத் தலைவரான பபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதை நாங்கள் துயரத்துடன் பார்க்கிறோம். வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் திட்டமிட்டு துன்புறுத்தப்படுவது ஒரு வழக்கமாக இருப்பதை இந்த கொலை உணர்த்துகிறது. இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவங்களைச் செய்தவர்கள் தண்டனையின்றி சுற்றித் திரிகிறார்கள்.

 இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். சாக்குப்போக்குகளை கண்டுபிடிக்காமல் அல்லது பாகுபாடு காட்டாமல் இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்கும் பொறுப்பை இடைக்கால அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் பசுதேப்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் 58 வயதான பாபேஷ் சந்திர ராய். இவர் வங்கதேச பூஜா உத்ஜபன் பரிஷத் என்ற அமைப்பின் பீரால் பகுதிக்கு துணைத் தலைவராக இருந்துள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள இந்து சமூகத்தின் முக்கிய தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பாபேஷ் சந்திர ராய் வீட்டுக்குள் நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரை கடத்திச் சென்று கடுமையாக தாக்கியுள்ளது. பின்னர் அவர் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து