முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை சித்திரைத் திருவிழா ஏற்பாடுகள்: அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      தமிழகம்
Velu-2025-04-20

மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின்போது, உயிர்ச் சேதம் போன்ற எந்த ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பகுதியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் மே.12-ல் நடக்கிறது. அப்போது, பல லட்சம் பக்தர்கள் கோரிப்பாளையம் பகுதியில் திரள்வது வழக்கம். அப்பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதாலும், கட்டுமான பொருட்களாலும் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராசன், மதுரை மாநகர மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சத்ரா விஜயன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், கோ. தளபதி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கோரிப்பாளையம் பகுதியில் ஆய்வு செய்தனர்.  

இதன்பின்பு, அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரைவில் சித்திரை திருவிழா தொடங்கும் நிலையில் கோரிப்பாளையம் மேம்பாலம் பணி, கட்டுமான பொருட்களால் இடையூறு ஏற்படும் என, மக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இடையூறாக இருக்கும் கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி, அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்தோம். மே 10-ம் தேதிக்குள் கோரிப்பாளையம் பகுதியிலுள்ள கட்டுமான பொருட்களை அகற்ற கட்டுமான நிறுவனம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். வைகையில் சுவாமி இறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்க தகுந்த ஏற்பாடு செய்யப்படும்.

மேம்பாலப்பணி குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலமடை மேம்பாலம் பணி 75 சதவீதமும், கோரிப்பாளையம் பாலம் 65 சதவீதமும் முடிந்துள்ளது.  டிசம்பருக்குள் பால பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

சித்திரைத்திருவிழா போன்ற நேரத்தில் காவல்துறை பணி முக்கியம்.  10 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பகுதியில் கூடும்போது, அவர்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு, தேவை காவல்துறையினருக்கு இருக்கிறது பக்தர்களை துன்புறுத்த வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இல்லை. காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை அழைத்து பேசியுள்ளோம் 

 

இத்திருவிழாவையொட்டி நேர்த்திக்கடனுக்கென பக்தர்களுக்கு உணவு வழங்குவதில் கட்டுப்பாடு விதிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். பொதுவாக அறநிலையத்துறை சார்பில், மாவட்ட நிர்வாகம் அனுமதித்த சில இடங்களில் சுத்தமில்லாத, ஆரோக்கியமற்ற உணவு பொருட்களை வழங்கக்கூடாது. ஹோட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வில் சில ஹோட்டல்களில் கலப்படம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் மதுரை மேலமடை பகுதியில் நடக்கும் மேம்பால பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து