முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்பிரிக்காவில் பயங்கரம்: படகில் தீ விபத்து; 143 பேர் பலி

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      உலகம்
Bote 2023 08 13

Source: provided

கின்ஷனா : ஆப்பிரிக்காவில் படகில் எரிபொருள் வைக்கப்பட்டு இருந்த பகுதியில் பயங்கிற தீ 143 பேர் உயிரிழந்தனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. போதிய சாலைவசதியின்மை காரணமாக இந்நாட்டில் போக்குவரத்திற்கு மக்கள் அதிக அளவில் ஆறுகளை பயன்படுத்துகின்றனர். இந்த பயணங்களின்போது விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் ஈக்வடூர் மாகாணத்தில் இருந்து அருகே உள்ள மாகாணத்திற்கு ருகி ஆற்றில் படகு சென்றுகொண்டிருந்தது. மரத்தால் ஆன அந்த படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். மேலும், எரிபொருளும் அந்த படகில் கொண்டு செல்லப்பட்டது. பண்டமா என்ற பகுதியில் சென்றபோது படகில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எரிபொருள் வைத்திருந்த பகுதியிலும் தீ மளமளவென பரவியது. இதனால் மரத்தால் ஆன படகு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இந்த சம்பவத்தில் படகில் பயணித்த 143 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆற்றில் குதித்த பலர் மாயமாகினர். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை நடைபெற்றுள்ளது. போதிய தகவல் தொடர்பு வசதியின்மை போன்ற காரணங்களால் இந்த விபத்து குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் ஆற்றில் குதித்து மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து