முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேல்பாதி திரௌபதியம்மன் கோவிலில் 3-வது நாளாக மக்கள் தரிசனம் செய்ய வரவில்லை

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      ஆன்மிகம்
Draupadi-Amman-temple

விழுப்புரம், மேல்பாதி  திரௌபதியம்மன் திருக்கோவில் வழிபாட்டுக்காக மூன்றாவது நாளாக சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது. ஆனால், மக்கள் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.

மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, 2023, ஜூன் 7-ஆம் தேதி வருவாய்த் துறையினரால் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பொதுமக்களின் வழிபாட்டுக்காக மேல்பாதி கோவில் வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது.

முதலில் ஒரு சமுதாயத்தைச் சோ்ந்த சிலா் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்துவிட்டு வந்த நிலையில், மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து கோவில் நடை அடைக்கப்பட்டது.

முன்னதாக, நாங்கள் கட்டிய கோவிலில் வழிபாட்டு உரிமையை அலுவலா்கள் எப்படி முடிவு செய்யலாம் என ஒரு சமுதாயத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன், ஏ.டி.எஸ்.பி. தினகரன் உள்ளிட்ட காவல் துறையினா், இந்து சமய அறநிலயைத்துறை அலுவலா்கள் முன்னிலையில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. திரெளபதியம்மனுக்கு கோவில் அா்ச்சகா் மோகன் பூஜைகளை நடத்தினா்.

மேல்பாதி கிராமத்தைச் சோ்ந்த ஒரு சமுதாய மக்கள் கோவிலுக்குள் அம்மனைத் தரிசனம் செய்ய வருவாா்கள் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அவா்கள் தரப்பிலிருந்து யாரும் வரவில்லை. மூன்று சிறுவா்கள் மட்டும் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்தனா். தொடா்ந்து  வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போதும் யாரும் தரிசனம் செய்ய வரவில்லை.

 இதைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை 6 மணிக்கு   கோவில்  திறக்கப்பட்டது.  சனிக்கிழமை காலை ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலுக்குள் தரிசனம் செய்ய வருவார்கள் என அலுவலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஒருவர் கூட தரிசனம் செய்ய வரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து