முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோஸ் பட்லர் அதிரடி: டெல்லியை வீழ்த்தியது குஜராத்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      விளையாட்டு
Gujarat-Titans-team 2024-05

Source: provided

அகமதாபாத் : ஜோஸ் பட்லரின் அதிரடி காரணமாக டில்லியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

இரண்டு ஆட்டங்கள்... 

ஐ.பி.எல். 2025 தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி அணியின் அபிஷேக் பொரேல், கருண் நாயகர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பொரேல் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 9 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

பவர்பிளேயில் 73 ரன்கள்... 

அடுத்து கே.எல். ராகுல் களம் இறங்கினார். இவர் 14 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 28 ரன்கள் விளாசினார். 3ஆவது விக்கெட்டுக்கு கருண் நாயர் உடன் அக்சர் படேல் ஜோடி சேர்ந்தார். பவர்பிளேயில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 73 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிகபட்ச பவர்பிளே ரன் இதுவாகும். டெல்லி பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்கிற்கு குறைந்த பந்தில் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கினர். இதனால் விக்கெட் வீழ்ந்தாலும் ரன் வேகத்தில் தொய்வு ஏற்படவில்லை.

படேல் - ஸ்டப்ஸ் அபாரம்...

கருண் நாயர் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இதனால் ஒவருக்கு 10 ரன்கள் என்ற அடிப்படையில் ஸ்கோர் உயர்ந்து கொண்டே வந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்தது. 14ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இவர் இந்த ஓவரில் 2 சிக்சருடன் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 15ஆவது ஓவரை சிராஜ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்டப்ஸ் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி 14.2 ஓவரில் 146 ரன்கள் எடுத்திருந்தது. 5ஆவது விக்கெட்டுக்கு அக்சர் படேல் உடன் அஷுடோஸ் சர்மா ஜோடி சேர்ந்தார். டெல்லி 15 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.

விப்ராஜ் நிகம் டக்...

16ஆவது ஓவரில் 13 ரன்களும், 17ஆவது ஓவரில் 10 ரன்கள் சேர்த்தது டெல்லி கேப்பிட்டல்ஸ். 18ஆவது ஓவரின் முதல் பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். அவர் 32 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.1 ஓவரில் 173 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த பந்தில் விப்ராஜ் நிகம் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஆனால் இதே ஓவரில் அஷுடோஸ் சர்மா 4ஆவது மற்றும் 5ஆவது பந்தில் அடுத்தடுத்து சிக்சர் விளாசினார். இதனால் டெல்லிக்கு இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது.

203 ரன் குவிப்பு... 

19ஆவது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன்கள் மட்டுமே அடித்தது. 19ஆவது ஓவர் முடிவில் டெல்லி 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை சாய் கிஷோர் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 9 ரன்கள் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அஷுடோஸ் சர்மா 19 பந்தில் 37 ரன்கள் விளாசினார். டெல்லி அணியின் முதல் 6 பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்களை கடந்தனர்.

பட்லர் 97...

204 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணி ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் சுப்மன் கில் 7 ரன்களில் வெளியேற அடுத்து வந்த ஜோஸ் பட்லர் டில்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். சாய் சுதர்சன் 36 ரன்களில் ஆட்டமிழக்க ரூதர் போர்டு களம் கண்டார். அவரும் தன்பங்கிற்கு சிறப்பாக விளையாடினார். இருப்பினும் அவர் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து குஜராத் அணி வெற்றி இலக்கை எட்டியது. பட்லர் 97 (54பந்துகள்), ராகுல் தெவாதியா 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து