முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாபர் அசாம் அற்புதமான ஆட்டத்துடன் திரும்பி வருவார்: கராச்சி அணி உரிமையாளர்

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025      விளையாட்டு
Babar-Assam 2023-09-27

Source: provided

கராச்சி : பாபர் அசாம்  ஒரு அற்புதமான ஆட்டத்துடன் திரும்பி வருவார்  என்று கராச்சி கிங்ஸ் அணி உரிமையாளர் சல்மான் இக்பால்  கூறினார்.

நட்சத்திர பேட்ஸ்மேன்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான பாபர் அசாம் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகிறார். அறிமுகம் ஆன புதிதில் ஏராளமான சாதனைகள் படைத்த அவர் தற்சமயம் படுமோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக அவரை பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக பாபர் அசாம் சிறப்பாக விளையாடிய தருணத்தில் அவர் விராட் கோலியை விட சிறந்த வீரர் என்று பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அவர்களே தற்போது பாபர் அசாமை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற அளவிற்கு விமர்சிக்கின்றனர்.

பெஷாவர் கேப்டனாக... 

இத்தகைய சூழலுக்கு மத்தியில் தற்போது பாபர் அசாம் தற்போது பி.எஸ்.எல். தொடரில் பெஷாவர் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதிலும் 2 போட்டிகளில் விளையாடி வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து அணிக்கு பின்னடைவை கொடுத்து வருகிறார். இந்நிலையில் பாபர் அசாம் மீண்டும் கம்பேக் கொடுக்கும்போது அவர் விராட் கோலியை விட சிறந்த வீரராக வருவார் என்று பி.எஸ்.எல். தொடரில் கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளரான சல்மான் இக்பால் தெரிவித்துள்ளார்.

அற்புதமான ஆட்டத்துடன்...

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "நான் உங்களுக்குச் சொல்கிறேன். என் வார்த்தைகளை குறித்து வைத்து கொள்ளுங்கள். பாபர் அசாம் மீண்டும் பார்முக்கு திரும்பும்போது, விராட் கோலி உட்பட உலகின் வேறு எந்த வீரரையும் விட அவர் ஒரு பெரிய வீரராக வருவார். அவர் கேரி சோபர்ஸ் மற்றும் சர் விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற பெயர்களுடன் இணைவார். அவரிடம் அந்த திறமை உள்ளது. அதை நீங்கள் மாற்ற முடியாது. அவர் ஒரு அற்புதமான ஆட்டத்துடன் திரும்பி வருவார்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து