முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்: மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      தமிழகம்      அரசியல்
Vaiko-2025-04-20

சென்னை, ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி  ம.தி.மு.க. சார்பில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், அவைத் தலைவர் அர்ஜுனராஜ் தலைமையில் நேற்று (ஏப். 20) சென்னை, எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகம் தாயகத்தில் நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை ரா.முருகன், தி.மு. ராசேந்திரன், டாக்டர் ரொஹையா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் -1:  2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும்  தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று ம.தி.மு.க. நிர்வாகக் குழு விழைகிறது.

தீர்மானம் -2:  தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுய ஆட்சிக் கோட்பாட்டின் அவசிய தேவையை வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறது.

தீர்மானம் -3: ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என். ரவியை  குடியரசுத் தலைவர் நீக்க வேண்டும் . 

தீர்மானம் -4: வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஜனநாயக வழியில் போராடி முறியடிக்க வேண்டும் . 

தீர்மானம் 5: நாள்தோறும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் குறித்து இந்தியப் பிரதமர் இலங்கை அதிபரிடம் கண்டனத்தை பதிவு செய்யாததை இக்கூட்டம் கண்டிக்கிறது.

தீர்மானம் 6:  அரசுப் பணியாளர்கள் அனைத்து இனங்களிலும் தமிழில் மட்டுமே கையொப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை ம.தி.மு.க. நிர்வாகக் குழு வரவேற்கிறது.

தீர்மானம் -7: தமிழ்நாட்டில் ஜாட் திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் -8: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32 ஆவது ஆண்டு தொடக்க விழாவை  சிறப்பாகக் கொண்டாடுவது என்று கட்சி நிர்வாகக் குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம் -9: தமிழ்நாடு ஆளுநரை உச்சநீதிமன்றம் மிகக் கடுமையாக கண்டித்திருக்கின்ற நிலையில், அவர் ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும்.

 தற்போது நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தி வருகிறது. இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஏப்ரல் 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து