முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன்: லக்னோ வீரர்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      விளையாட்டு
Avesh-Khan-2025-04-20

ஜெய்பூர், நான் ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன் என்று லக்னோ வீரர் ஆவேஷ் கான்  தெரிவித்துள்ளார்.

திரில் வெற்றி...

ஜெய்பூரில்  நடைபெற்ற ராஜஸ்தான் - லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டபோது லக்னோ அணியின் ஆவேஷ் கான் சிறப்பாக பந்துவீசி 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்தப் போட்டியில் 18, 20ஆவது ஓவர்களில் முறையே 5, 6 ரன்களை வழங்கி அசத்தினார். 4 ஓவர்கள் வீசிய ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.

இந்தியாவின் ஸ்டார்க்?

இதேபோல் சமீபத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக டில்லி வீரர் மிட்செல் ஸ்டார்க் சூப்பர் ஓவரில் அசத்தலாக பந்துவீசி வெற்றிக்கு வித்திட்டார். அதனால், பலரும் ஆவேஷ்கானை மிட்செல் ஸ்டார்க்குடன் ஒப்பிட்டு வருகிறார்கள். இது குறித்து ஆவேஷ் கான் கூறியதாவது:

யார்க்கர் தான் பலம்...

நான் எப்போதும் யார்க்கர் பந்துகளை மட்டுமே வீச முயல்கிறேன். ஏனெனில், என்னுடைய சிறந்த பந்து யார்க்கர் என்றே நினைக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் யார்க்கர் பந்துகளை வீசவே நினைக்கிறேன். ஐ.பி.எல். தொடரில் உங்களது பலத்தை நம்பியாக வேண்டும்.

அழுத்தமே இல்லை...

செயல்பாட்டில் கவனம் செலுத்துகிறேன். திடலில் பந்தினை எடுத்த பிறகு எப்போதும் அழுத்தத்தில் இருக்க மாட்டேன். எந்தப் பந்தினை வீசினாலும் என்னை 100 சதவிகிதம் நம்புவேன். ஐ.பி.எல். தொடரில் பல போட்டிகளில் அதிகமான இலக்குகள் இருந்துள்ளன. பந்துவீச்சாளர்கள் பல ரன்களை கொடுக்க வேண்டியுள்ளது. முதல் ஓவரில் நானுமே 13 ரன்களை கொடுத்தேன். ஆனால், போட்டி நம்மிடம் என்ன கேட்கிறது என்பதையே சிந்திப்பேன். பிட்ச் என்ன எதிர்பார்க்கிறது என்பதில் கவனமாக இருப்பேன். ஒன்றைச் செய்து முடித்தலில் நான் கவனம் செலுத்துகிறேன்.

ஸ்டார்க் ஆக விரும்பவில்லை...

 

நான் ஸ்டார் ஆக விரும்பவில்லை. நல்ல ஆவேஷ் கான் ஆகவே விரும்புகிறேன். யார்க்கர்தான் எனது பலம். அதையே இந்தத் தொடரில் தொடர விரும்புகிறேன் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து