முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி, ராஜஸ்தானுக்கு மதுரை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      தமிழகம்
Train 2023-04-06

சென்னை, டெல்லி, ராஜஸ்தானுக்கு மதுரை, நெல்லையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண். 06067) 23-ம் தேதி பிற்பகல் 12.30 மணிக்கு பகத் கீ கோதி சென்றடையும். மறுமாா்க்கமாக பகத் கீ கோதியில் இருந்து 24-ம் தேதியில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண். 06068), 26-ம் தேதி காலை 8.30 மணிக்கு மதுரை வந்தடையும்.

இதில் 12 மூன்றடுக்கு ஏ.சி. வகுப்பு பெட்டிகள், 6 எக்கனாமிக் ஏ.சி. வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், சூலூா்பேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், சந்திரபூா், வா்தா, அகோலா, ஜல் கான், நந்தூா்பாா், உத்னா (சூரத்), வடோதரா, சபா்மதி பிஜி, ஜலோா், லூனி வழியாக இயக்கப்படும்.

நெல்லையில் இருந்து இன்று இரவு 10.15 மணிக்கு டெல்லிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் (எண். 06161), வருகிற 24-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு டெல்லி ஹசரத் நிஜா முதீனுக்கு சென்றடையும். இதில் படுக்கை வசதி கொண்ட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மரு வத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, வாராங்கல், நாக்பூர், போ பால், குவாலியர், ஆக்ரா, மதுரா வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து