முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியேறும் சுற்றுலா பயணிகள்: காஷ்மீர் முதல்வர் உமர் வருத்தம்

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025      இந்தியா
Umar-Abdullah 2023-10-27

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதால்  முதல்வர் உமர் அப்துல்லா வருத்தம் தெரிவித்துள்ளார்.

 இது குறித்து உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஹல்காமில்  நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பள்ளத்தாக்கை விட்டு எங்களின் விருந்தினர்கள் வெளியேறுவதைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. ஆனாலும் மக்கள் ஏன் வெளியேற விரும்புகிறார்கள் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்கிறோம். கூடுதல் விமான சேவைகளுக்காக டி.ஜி.சி.ஏ. மற்றும் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் பணியாற்றி வரும் நிலையில், ஸ்ரீநகர் - ஜம்மு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 44 ஒருவழிப் பாதைக்காக திறக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

 இதனிடையே  ஸ்ரீநகரைச் சேர்ந்த அஜஸ் அலி என்ற சுற்றுலா ஏற்பாட்டாளர் கூறுகையில், “காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். என்றாலும் பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவம் இங்கே நடந்த பிறகு யாரும் இங்கே தங்கி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ரத்துசெய்யப்பட்டுள்ளவை மிக அதிகம். கிட்டத்தட்ட 80 சதவீத பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஒரு மாதத்துக்கும் கூட பயணங்கள் ரத்து செய்யப்படலாம். பல ஆண்டுகளாக செய்யப்பட்ட அனைத்து நல்ல விஷயங்களும் வீணாகிவிட்டன. காஷ்மீருக்கு மீண்டும் சுற்றுலா பயணிகளை கொண்டு வர நிறைய பாடுபடவேண்டி இருக்கும்.” என்றார்.

இதனிடையே, ஸ்ரீநகர் வழித்தடத்தில் கட்டணங்களை அதிகரிக்கக் கூடாது என்றும், விமான நிறுவனங்கள் கூடுதல் விமானங்களை இயக்கவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து