முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

300 சிக்ஸர்கள்: புதிய சாதனையை நிகழ்த்த தவறிநார் ரோகித் சர்மா..!

ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

மும்பை : லக்னோவுக்கு எதிரான போட்டியில் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா தவற விட்டார்.

300 சிக்ஸர்கள்... 

வான்கடே திடலில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்தப்போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்தால் ஐ.பி.எல். வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைய நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆட்டமிழப்பு...

மயங்க் யாதவ் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 2 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்த ரோகித் சர்மா அடுத்த இரண்டு பந்துகளில் ரன்கள் எடுக்காமல் டாட் செய்தார். 5ஆவது பந்தில் மெதுவாக வீசப்பட்ட பந்தில் ஆட்டமிழந்தார். 5 சிக்ஸர்கள் தேவைப்பட்ட போது 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழந்து சாதனையை தவறவிட்டார்.  

கெயில் முதலிடம்...

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 357 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். ரோகித் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து