முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 26 ரபேல் போர் விமானங்கள்: இந்தியா- பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      இந்தியா
India-France-rafel-2025-04-

டெல்லி, பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா, பிரான்ஸ் இடையே 2016ம் ஆண்டு ரபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது. இதனிடையே, பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. இந்த போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ளது. 64 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் அதிகாரிகள் இடையே காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இந்த ஒப்பந்தத்தில் இந்திய கடற்படைக்கு புதிய ஆயுதங்களையும் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் 26 ரபேல் விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் இந்தியாவில் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து