முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      இந்தியா
Senthil-Balaji 2023 03 27

புதுடெல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை  முடித்து வைத்து  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இதைத்தொடர்ந்து அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. செப்டம்பர் 29-ந் தேதி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றார்.

இதையே காரணமாக வைத்து அமலாக்கத்துறை அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாடியது.  வழக்கு விசாரணையின் போது  சுப்ரீம் கோர்ட், செந்தில்பாலாஜி ஜாமீனில் வெளியே இருக்க விரும்புகிறாரா? அல்லது அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்புக்கு காட்டமாக கேள்வி எழுப்பியது.

இதுதொடர்பாக முடிவெடுக்க நேற்று (திங்கட்கிழமை) வரை சுப்ரீம் கோர்ட் காலஅவகாசம் வழங்கியது.  இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன்படி, இந்த வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில்பாலாஜி அமைச்சராகக்கூடாது என்றும் மீண்டும் அமைச்சராகி ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை தாக்கல் செய்ய வைக்கக்கூடாது என வாதிட்டார். இதற்கு குறுக்கீட்டு வாதிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல், பதவியா, ஜாமீனா என்ற கேள்விக்கு செந்தில்பாலாஜி பதவி விலகி பதில் அளித்துவிட்டார் என்றும் மீண்டும் அமைச்சராக முடியாது என சுப்ரீம் கோர்ட் கூற அதிகாரம் இல்லை என்றும் கூறினார்.

இறுதியில், பதவி விலகல் தொடர்பான கவர்னர் மாளிகையின் செய்திக்குறிப்பை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை என்று நீதிபதிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து