முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      இந்தியா
YouTube 2024-03-27

புதுடில்லி, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் 16 யூடியூப் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன.

அதன் விபரம் பின்வருமாறு:

டான் நியூஸ், இர்ஷாத் பட்டி, சமா டிவி, ஆரி நியூஸ், போல் நியூஸ், ராப்டர்,  தி பாகிஸ்தான் ரிபிரன்ஸ், ஜியோ செய்திகள், சமா ஸ்போட்ஸ், ஜி.என்.என்., யூசார் கிரிக்கெட், உமர் சீமா எக்ஸ்குளூசிவ், அஸ்மா, முனாப் பரூக், சனோ நியூஸ் எச்.டி., ராசி ராமா,  இவை அனைத்தும் பாகிஸ்தானை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் நடத்தப்படும் சேனல்கள் ஆகும். ஜம்மு காஷ்மீரில் நடந்த துயரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆத்திரமூட்டும் வகையில் தவறான கருத்துகளை வெளியிட்டதால் முடக்கம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து