Idhayam Matrimony

காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 33 வங்கதேசத்தினர் கைது

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      தமிழகம்
Jail-1

Source: provided

பூந்தமல்லி : காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 33 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் வங்கதேசம் நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் நேற்று காலை டெல்லி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், மாங்காடு பகுதியில் 26 பேர், குன்றத்தூர் பகுதியில் 7 பேர் என, வங்கதேசத்தைச் சேர்ந்த 33 உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை டெல்லி போலீஸார் கைது செய்து, மாங்காடு அடுத்துள்ள கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.கைதானவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சமூக நல கூடத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

கைதான 33 பேர் உரிய ஆவணங்களின்றி மாங்காடு, குன்றத்தூர் பகுதிகளில் தங்கி சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரித்து வந்தது போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் சட்ட விரோதமாக தமிழகத்துக்குள் வந்தது எப்படி? இவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்தவர்கள் யார் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக டெல்லி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் இருப்பதால் அவர்களின் முழு விவரங்களை சேகரித்து வரும் டெல்லி போலீஸார், வங்கதேசத்தைச் சேர்ந்த 33 பேர் சதி செயலுக்காக தமிழகத்துக்கு வந்தார்களா? அல்லது தமிழகத்தில் இருந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் உதவி புரிந்தார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து