Idhayam Matrimony

மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலி

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

திருவாரூர் : மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கியதில் 12 வயது சிறுமி உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமேனிஏரி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் - மீனா தம்பதியின் மகள் அனுஷ்கா (12 வயது). 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலையில் வீட்டில் இருந்த அனுஷ்கா மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அனுஷ்காவை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து