Idhayam Matrimony

ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பியதாக வட கொரியா அறிவிப்பு

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      உலகம்
KIM 2024-10-18

Source: provided

மாஸ்கோ : ரஷ்யாவுக்காக போரிட படைகளை அனுப்பினோம் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா அந்நாட்டின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் கொண்டு வந்துள்ளது. அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் போர் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சண்டையில் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து சில நாடுகளை சேர்ந்த வீரர்களும் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, வடகொரிய வீரர்களை ரஷ்யா பயன்படுத்துவதாகவும், அவர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புகார் கூறினார்.

முதல் இதுபற்றி உறுதியான தகவலை வெளியிடாமல் இருந்த ரஷ்யா, சமீபத்தில் இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா படை வீரர்களும் களம் இறங்கி உள்ளதாக ரஷ்ய ராணுவ தலைமை தளபதி வலேரி ஜெராசிமோவ் தெரிவித்தார். வடகொரிய வீரர்கள் மிகுந்த தைரியம், திறமை மற்றும் வீரத்துடன் உக்ரைன் படைகளை எதிர்த்து போரிட்டதாகவும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையே கையெழுத்தான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பின்னர் இந்த உதவி வழங்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார். 

இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிடுவதற்கு துருப்புகளை அனுப்பியதை வட கொரியா முதல் முறையாக உறுதி செய்துள்ளது. குர்ஸ்க் பகுதியில் உக்ரைனின் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ரஷ்ய பிரதேசத்தை திரும்ப பெறுவதற்கான தாக்குதலில் வட கொரிய படைகள் பங்களிப்பை வழங்கியதாகவும் கூறி உள்ளது. 

இதுபற்றி வட கொரியாவின் அதிகாரப்பூர்வமான மத்திய செய்தி நிறுவனத்திற்கு ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய ராணுவ ஆணையம் நேற்று செய்தி அனுப்பி உள்ளது. அதில், ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ரஷ்ய படைகளுடன் சேர்ந்து போரிடுவதற்காக துருப்புக்களை நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன் அனுப்பியதாக கூறப்பட்டுள்ளது. வட கொரியா இவ்வாறு உறுதி செய்ததைத் தொடர்ந்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய தலைவர் கிம்மிற்கு தனிப்பட்ட முறையில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். தனது நாட்டின் கொரிய நண்பர்கள் ஒற்றுமை, நீதி மற்றும் தோழமை உணர்வுடன் செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து