முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 93 வேட்பாளர்கள் டெபாசிட் தொகை இழந்தனர்

செவ்வாய்க்கிழமை, 17 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மே.17 - மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களைத் தவிர 93 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை இழந்தனர்.

தமிழகத்தில் கடந்த 13 -ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்தது. தனி தொகுதி வேட்பாளர் ரூ.5 ஆயிரமும், பொதுத்தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும் டெபாசிட் தொகை கட்டியிருந்தனர். கடந்த 13 -ம் தேதி வெளியான முடிவில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இந்தத் தொகுதிகளில் 113 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 20 வேட்பாளர்களைத் தவிர பா.ஜ.வைச் சேர்ந்தோர் உள்ளிட்ட 93 வேட்பாளர்களும்  டெபாசிட் இழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்