முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமனில் நடந்த பயங்கரம்: ஈரான் தூதர் சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

சனா, ஜன. 20 - ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் ஈரான் நாட்டு தூதர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தீவிரவாதிகள் நடத்தியிருக்க 

லாம் என்று கூறப்படுகிறது. 

ஏமன் நாட்டில் உள்ள ஈரான் தூதரக அதிகாரி அலி அஷ்கார் ஆசாதி. இவர் தலைநகர் சனாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் பணி புரிந்தார். 

இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் தனது வீட்டில் இருந்து காரில்புறப்பட்டு வெளியே சென்று கொண்டிருந்தார். 

ஹாட்மாவில் உள்ள வணிக வளாகம் அருகே இவரது கார் சென்று கொண்டிருந்தது. அப்போது இவரை வேனில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள்  3 தடவை துப்பாக்கியால் சுட்டனர். 

அதனால் அலி அக்ஷாரின் வயிறு, தோள்பட்டை மற்றும் இடுப்பு பகுதியில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. 

இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். 

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் அல்கொய்தாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர். தூதர் கொல்லப்பட்டதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்