முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட்: இந்திய அணி 438 ரன் குவிப்பு - ரகானே சதம்

சனிக்கிழமை, 15 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

வெலிங்டன், பிப். 16 - நியூசிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டன் நகரில் நடந்து வரும் 2_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்னைக் குவித்து உள்ளது. 

இந்திய அணியின் இன்னிங்சில் ரகானே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். டெஸ்ட்  போட்டியில் இது அவருக்கு முதலாவது சதமாகும். ஷிகார் தவான் 2 ரன் வித்தியாசத்தில் சத வாய்ப்பை நழுவவிட்டார். 

இந்தியா _நியூசிலாந்து அணிகள் மோதும் 2_வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. 

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ரன்னில் சுருண்டது. வில்லியம்சன் அதிகபட்சமாக 47 ரன் எடுத்தார். 

இந்திய அணி சார்பில் முன்னணி வேகப் பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா 6 விக்கெட்டும், மொகமது சமி 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்  இழப்பிற்கு 100 ரன் எடுத்து இருந்தது. 

துவக்க வீரர் ஷிகார் தவான் 71 ரன்னும், நைட் வாட்ச்மேனாக இறங்கி ய இஷாந்த் சர்மா 3 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

நேற்று 2_வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இஷாந்த் சர்மா 26 ரன் எடுத்து இருந்த போது போல்ட் வீசிய பந்தில் அவுட் ஆனார். 

அடுத்து விராட் கோக்லி களம் வந்தார். மறுமுனையில் இருந்த தவான் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் துரதிருஷ்டவசமாக 98 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

127 பந்துகளில் 14 பவுண்டரி , ஒரு சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். முதல் டெஸ்டில் தவான் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. 

ரோகித் சர்மா வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்து இருந்தது. 

அப்போது விராட் கோக்லி 27 ரன்னையும், ரகானே 22 ரன்னையும் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். 

பொறுப்புடன் விளையாடி வந்த கோக்லி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அவுட் ஆனார். அவர் 38 ரன்கள் எடுத்தார். 

7_வது விக்கெட்டுக்கு ரகானே, கேப்டன் தோனி ஜோடி சிறப்பாக விளையாடி ரன்னை உயர்த்தியது. ரகானே 93 பந்தில் 50 ரன்னை (7 பவுண்டரி) தொட்டார். 

81_வது ஓவரில் நியூசிலாந்து புதிய பந்தை எடுத்தது. 82.3 _ வது ஓவரில் இந்திய அணி 300 ரன்னைத் தொட்டது. தேனீர் இடைவேளைக்குப் பிறகு தோனி 50 ரன்னை எடுத்தார். 

இந்த ஜோடியை போல்ட் பிரித்தார். தோனி 68 ரன் எடுத்திருந்த போது, பெவிலியன் திரும்பினார். 86 பந்தில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். 

அப்போது, ஸ்கோர் 348 ஆக இருந்தது. 7 _வது விக்கெட் ஜோடி 120 ரன் எடுத்தது சிறப்பானதாகும். பின்பு 8 _வது விக்கெட்டுக்கு ரவீந்திர ஜடேசா ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார். 

அவர் தன் பங்குக்கு 26 ரன்கள் சேர்த்தார். அடுத்து ஜாஹீர்கான் இறங்கினார். 98.4 ஓவரில் இந்திய அணி 400 ரன்னை குவித்தது. 

மறுமுனையில் இருந்த ரகானே தொடர்ந்து சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 99 ரன்னில் இருந்து பவுண்டரி அடித்து அவர் 103 ரன்னை எடுத்தார். 

149 பந்துகளில் 15 பவுண்டரியுடன் அவர் சதம் அடித்தார். 5_வது டெஸ்டில் விளையாடும் ரகானேவுக்கு இது முதல் சதம் ஆகும். 

ரகானே 118 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். 158 பந்துகளில் 17 பவுண்டரி, 1 சிக்சருடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். இந்திய அணி 102.4 ஓவரில் 438 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது நியூசிலாந்து ஸ்கோரை விட 246 ரன் கூடுதலாகும். 

ஜாஹீர்கான் கடைசியாக 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். போல்ட், சௌதி, வாக்னர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். 

246 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2_வது இன்னிங்சைஆடியது. ஆட்டத்தின் 2_வது ஓவரில் தொடக்க ஜோடியை ஜாஹீர்கான் பிரித்தார். 

புல்டான் 1 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யு. ஆனார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 24 ரன் எடுத்து இருந்தது. 

இந்தப் போட்டி இன்னும் 3 நாட்கள் இருக்கிறது. இந்த டெஸ்டில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. 

நியூசிலாந்து அணியின் எஞ்சிய 9 விக்கெட்டுகளை 221 ரன்னுக்குள் கைப்பற்றினால் இன்னிங்ஸ் வெற்றி பெறலாம். இன்று இந்திய பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தினால் இனன்னிங்ஸ் வெற்றியை பெற முடியும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்