முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல் தகுதி இருக்கும் வரை விளையாடுவேன்: அப்ரிடி

சனிக்கிழமை, 8 மார்ச் 2014      விளையாட்டு
Image Unavailable

 

டாக்கா, மார்ச். 8 - உடல் தகுதி இருக்கும் வரை வாழ்க்தை முழுவதையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்து விளையாடுவேன் என்று பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான சாகித் அப்ரிடி தெரிவித்து உள்ளார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அப்ரிடி முன்பெல்லாம் அணியை வெற்றி பெற வைக்கக் கூடிய சமயத்தில் தேவையில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்து நெருக்கடி கொடுப்பதையே வாடிக்கையாக கொண்டு இருந்தார். 

ஆனால் தற்போது வங்கதேசத்தில் நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர் அற்புதமாக ஆடி வருகிறார். இதில் 5 நாடுகள் பங்கேற்று வருகின்றன. 

அப்ரிடி இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 18 பந்துகளில் 34 ரன்களும், வங்கதேசத்திற்கு எதிராக 25 பந்துகளில் 7 சிக்சர்களுடன் 59 ரன்கள் விளாசி இலக்கை சேசிங் செய்ய உறுதுணையாக இருந்தார். 

அப்ரிடியின் ருத்தர தாண்டவத்தால் தான் இந்திய அணியின் இறுதி போட்டிக்கான வாய்ப்பு அம்பேல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் ஆல்ரவுண்டர் அப்ரிடி அளித்த பேட் டி வருமாறு _ எனது ஆட்டத் திறமை மூலம் நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை அளிக்க ஆசைப்படுகிறேன். 

ஆனால் எல்லா நாளும் இதே போன்று ரன்கள் குவிக்க முடியாது. அதனால் தான் பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறேன். 

2015 ம் ஆண்டு உலகக் கோப்பையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். உடல் தகுதி இருக்கும் வரை எனது வாழ்க்கை முழுவதையும் கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்து விளையாடுவேன். 

ஆனால் அணிக்கு சுமையாக இருக்கிறேன் என்று எப்போது உணரத் தொடங்குகிறேனோ அன்றே ஓய்வு பெற்று விடுவேன். எனது ஓய்வு குறித்து மற்ற யாரும் பேச வாய்ப்பு தர மாட்டேன். 

இந்திய மண்ணில் நான் எப்போதும் உற்சாகமாக விளையாடுவேன். இந்தியாவைத் தவிர வேறு எந்த இடத்திலும் ரசித்து, அனுபவித்து விளையாடியதில்லை. 

இந்தியாவும், பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நமக்குள் நல்ல உறவு இருக்க வேண்டும். கிரிக்கெட்டால் மட்டுமே இரு நாடுகள் இடையிலான உறவில் முன்னேற்றம் காண முடியும். 

இந்தியா _ பாகிஸ்தான் இடையிலான உறவுக்கு கிரிக்கெட்டால் மட்டுமே புத்துயிர் அளிக்க முடியும். இவ்வாறு அப்ரிடி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago