முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம் - தங்கக் கவசம் சாத்துப்படி

ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஏப்.14 - கமிழ்ப்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, மதுரை அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடமும், தங்கக் கவசமும் இன்று சாத்துப்படியாகிறது.

சித்திரை மாதம் முதல் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீவிஜய முடிந்து ஸ்ரீவிஜய வருடம் பிறப்பதை முன்னிட்டு, அதிகாலையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றனர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அருள்மிகு மீனாட்சியம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்படுகிறது. மேலும், வைரக் கிரீடமும் சார்த்தப்படுகிறது. அருள்மிகு சுந்தரேசுவரருக்கு வைர நெற்றிப்பட்டை அணிவிக்கப்படுகிறது.

காலை முதல் மாலை வரை சிறப்புப் பூஜைகளும், தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு வெயிளின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நிழற்கூடம், குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் விவசாயிகள் தங்கள் நிலங்களி்ல் உழவை மேற்கொள்வது பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதன்படி. புதிய கலப்பை கொழுவை மூலம் நிலங்களில் உலுதும், பின் புதிய தார்க்குச்சிகளை வைத்து வழிபாடு நடத்தி விதை விதைப்பதும் வழக்கம்.

மதுரை அழகர்கோவில், மேலூர் பகுதிகளில் தமிழ்ப்புத்தாண்டு தினத்தை வெற்றிலை, நெல்மணிகளை முன்னிலைப்படுத்தி, பூஜைகள் நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்