முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா எனக்கு நண்பர்: மோடி பேச்சு

வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2014      தமிழகம்
Image Unavailable


சென்னை, ஏப். 18 - முதல் _ அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியை மட்டுமின்றி பாரதீய ஜனதாவையும் விமர்சித்து பேசி வருகிறார்.
இதுபற்றி பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:_
அரசியலில் தீண்டத்தகாதது என்ற நிலையில் இருப்பதில் எனக்கு ஒரு போதும் நம்பிக்கை இருந்தது இல்லை. எல்லா கட்சித் தலைவர்களுடன் நான் நல்ல நட்புடன் பழகி வருகிறேன்.
கொள்கை ரீதியாக மாறுபடுவதால் நாங்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொள்ளலாம். ஆனால் தமிழக முதல்_அமைச்சர் ஜெயலலிதா உள்பட அனைவரிடமும் எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மாற்று அணியில் உள்ளார். ஆனால் அவர் எனக்கு நல்ல நண்பர். நமது ஜனநாயகத்தின் அழகே இதுதான்.
எந்த ஒரு அரசும் பழி வாங்கும் உணர்வுடன் செயல்படக்கூடாது. ஆனால் அதே சமயத்தில் சட்டம் தன் கடமையை தானே செய்யட்டும் என்று விட்டு விட வேண்டும்.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் நரேந்திர மோடியின் மனைவி பற்றியும், அவர் டீ விற்றது பற்றியும், அவரது தனிப்பட்ட வாழ்வு பற்றியும் பல தடவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் கூட நரேந்திர மோடி யார் பற்றியும் தனிப் பட்ட முறையில் பேசுவதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்