முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் யுக்தி குறித்து ராகுல் காந்தி ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,ஜூன்.- 8  - உத்திரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் யுக்தி குறித்த ஆலோசனையை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தொடங்கினார். நாட்டிலேயே பெரிய மாநிலம் உத்திரப்பிரதேசமாகும். இந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடைபெற உள்ளது. இப்போதே தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறார்கள். உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க சிறந்த பேச்சாளரான உமாபாரதியை பாரதிய ஜனதா மீண்டும் கட்சியில் சேர்த்துள்ளது. காங்கிரஸ் கட்சியும் தேர்தலுக்கான யுக்தியை வகுக்கும் பணியை ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி நேற்று டெல்லியில் இருந்து லக்னோ வந்தார். லக்னோ வந்ததும் நேராக காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்று மாநில தேர்தல் கமிட்டியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் நேற்று காலை சரியாக 11-15 மணிவரை நடைபெற்றது. கூட்டத்தில் உத்திரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரம் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலில் யார் யாரை வேட்பாளராக தேர்வு செய்யலாம். வேட்பாளர்களுக்கு தகுதி என்னென்ன நிர்ணயிப்பது,முதல் கட்டமாக 100 வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும் உத்திரப்பிரதேச அரசியல் விவகாரத்தை கவனிப்பவருமான திக்விஜய் சிங், மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷீத், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால், பெனி பிரசாத் வர்மா, பிரதீப் ஜெயின் ஆதித்யா, ஜிதின் பிரசாத் லோக்சபை காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜ் பப்பர், ஜெதாம்பிகா பால், பி.எல்.புனியா, நிர்மல் ஹத்ரி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்