முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுடனான உறவு இன்றியமையாதது: ஜான் கெர்ரி

புதன்கிழமை, 30 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜூலை.31 - இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவு இன்றியமையாதது என்றும், இரு நாடுகளும் அந்த மாற்றத்துக்கான நேரத்தை நெருங்கியுள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்தார்.

வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்க சிந்தனையாளர்கள் கருத்தரங்கம் ஒன்றில், இந்தியா மீதான வெளிநாட்டுக் கொள்கை குறித்து ஜான் கெர்ரி பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காகவும் என்ற திட்டத்தை சிறந்த தொலைநோக்குப் பார்வையாகக் கருதுகிறோம். அந்தத திட்டத்துக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம்.

அதற்கேற்ப, இந்தியாவின் பொருளாதாரத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கான கிரியா ஊக்கியாகச் செயல்பட அமெரிக்காவின் தனியார் துறை ஆர்வமாக உள்ளது. இந்தியாவிடனான எங்கள் நடப்ுறவில் சாத்தியமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.இந்தியாவில் மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் கொண்டு வருவதற்காகவே பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற புதிய அறசு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவும், இந்தியாவும் இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத நட்பாளர்கள். உலகின் மிகப் பெரிய பிரச்னைகளைத் தீர்க்க நமது நட்புறவு அவசியம் என்றார் ஜான் கெர்ரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்