முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவையில் பஞ்சாயத்து தி.மு.க. துணைத்தலைவர் கைது

புதன்கிழமை, 29 ஜூன் 2011      அரசியல்
Image Unavailable

கோவை,ஜூன்.29  - கோவை தொண்டாமுத்தூரில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ததாக மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க. துணைத் தலைவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை சிதம்பரம் பூங்கா அருகில் ஏ.பி.டி. காலனியில் வசிப்பவர் சர்மா. இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளித்தார். அதில் கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் உள்ள கிரீன் ஹோம் லேண்ட் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நடத்தி வந்த ஆனந்த் என்பவரிடம் தவணை முறையில் மனையிடங்கள் வாங்க ஒப்புக் கொண்டு 2001 ம் ஆண்டு முதல் தவணையாக ரூ. 20 ஆயிரம் ரொக்கப் பணம் கொடுத்துள்ளார். மீதம் 59 தவணைகளில் ரூ. 2,500 வீதம் 54 தவணைகள் கட்டியுள்ளார். 

மீதமுள்ள தவணைகளை கட்ட சென்ற போது ஆனந்த் வாங்க மறுத்ததுடன் மிரட்டி அனுப்பி உள்ளார். இதையடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்த போது சர்மாவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பொன்னுச்சாமி, தி.மு.க பிரமுகர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று காலை ஆனந்தனை கைது செய்தனர். மோசடி செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. 50 லட்சமாகும். 

நிலமோசடி செய்த ஆனந்த் அவிநாசி தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. இளங்கோவனின் மகன் ஆவார். இவர் கோவை மாவட்ட தி.மு.க துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் பல நில மோசடிகளில் ஈடுபட்டிருக்கும் ஆனந்தனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்