முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

க்யூ திரைப்படத்திற்கு தேசிய விருது

புதன்கிழமை, 18 மார்ச் 2015      சினிமா
Image Unavailable

சென்னை சஞ்சீவ் குப்தாவின் க்யூ திரைப்படத்திற்கு(ஹிந்தி) கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது 2014 வழங்கப்படுகிறது  சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான 18வது கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருதை . சஞ்சீவ் குப்தா அவரது முதல் திரைப்படமான ‘க்யூ’ (ஹிந்தி)-க்காக வென்றிருக்கிறார்.

ஹிந்தி, மலையாளம், மராத்தி, பெங்காலி, தெலுங்கு மற்றும் கன்னடம் உட்பட பல மொழிகளில் நாடெங்கிலுமிருந்து இவ்விருதுக்காக கிடைக்கப்பெற்ற 27 விண்ணப்ப நுழைவுகளிலிருந்து இத்திரைப்படம் தேர்வுசெய்யப்படுகிறது. பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த், தேசிய விருதுபெற்ற திரைப்பட இயக்குனரான . சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் மற்றும் திரைப்பட நடிகையான திருமதி. ரோகிணி விருதுக்கான நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

‘க்யூ’ திரைப்படமானது, 6 வயது நிரம்பிய ஒரு சிறுமியின் இடைவெளி விஜயம் குறித்த, முழுதும் கவனத்தை ஈர்க்கிற திரைக்கதையாகும். திரைப்படம் தொடங்குகிற முதல் ஃபிரேமிலிருந்தே பார்வையாளர்களின் கவனத்தை இது முழுவதுமாக ஈர்க்கிறது. 6 வயதாகிற ஒரு சிறுவன் மற்றும் ஒரு கைக்குழந்தையுடன் உள்ள ஒரு தாயோடு இச்சிறுமி தங்கியிருக்கிறாள். இச்சிறுமி நோய்வாய்ப்பட கதையானது, ஒரு திருப்பத்தை எதிர்கொள்கிறது.

திரைப்பட கதையை பரபரப்பாக்குகிறது. மிகக்குறைந்த வசனங்களைக் கொண்டு மற்றும் இசைக்கோர்ப்பே இல்லாதவாறு நகர்கின்ற கதைப் போக்கு, இயக்குநர் திரைக்கதை மீது கொண்டிருக்கிற பிடிப்பை அழகாக வெளிப்படுத்துகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து