முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மும்பை இந்தியன்சுடன் மோதல்

வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015      விளையாட்டு
Image Unavailable

மும்பை, ஏப்.17-
8-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது. 2 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. டெல்லி டேர்டெவில்சை 1 ரன்னிலும், சன்ரைஸ் ஐதராபாத்தை 45 ரன்னிலும் வீழ்த்தியது. சென்னை அணி தனது 3வது ஆட்டத்தில் மும்பை இந்தின்சை இன்று எதிர்கொள்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு இன்த ஆட்டம் நடக்கிறது.

இதிலும் வென்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.
டோனி தலைமையிலான முதல் 2 ஆட்டத்திலும் உள்ளூர் மைதானத்தில் வெற்றி பெற்றது. தற்போது மும்பையை அதன் சொந்த மன்னில் சந்திப்பதால் சவால் இருக்கலாம். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாக இருந்து வருகிறது. சென்னை கேப்டன் டோனி, மெக்கல்லம், சுமித், ரெய்னா, டுபிசிஸ், பிராவோ, ஜடேஜா, அஸ்வின் போன்ற சிறந்த வீரர்கள் சென்னை அணியில் உள்ளனர்.


ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தின்ஸ் அணி விளையாடிய 3 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உடன்  7 விக்கெட் வித்தியாசத்திலும், பஞ்சாப்பிடம் 18 ரன்னிலும், ராஜஸ்தானிடம் 7 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.


உள்ளூர் வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் அந்த அணி தினறி வருகிறது. முதல் வெற்றிக்காக மும்பை இந்தியன்ஸ் காத்திருக்கிறது. இந்த இரு அணிகளும் மோதும் ஆட்டம் எப்போதுமே விறுவிறுப்பாக இருக்கும். இரண்டு இறுதிப் போட்டி உள்பட 20 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 10 ஆட்டத்திலும் மும்பை 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து