முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியாபம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் காங்.தலைவர் திக்விஜயசிங் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2015      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி: மத்திய பிரதேச தொழில்நுட்ப கல்வி வாரியம்(வியாபம்) ஊழல் வழக் கை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் சிறப்பு விசாரணைக்குழு மேற்பார்வையில் சி.பிஐ விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் தலைவர் திக் விஜய சிங் கூறினார்.
மத்திய பிரதேசத்தில் மருத்துவம்,என்ஜினியரிங்,நிர்வாக அமைப்பு,ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றை அந்த மாநிலத்தின் தொழில்நுட்ப கல்வி வாரியம் தேர்வு நடத்தி ஊழியர்களை நியமனம் செய்து வருகிறது. இந்த கல்வி வாரியத்திற்கு இந்தியில் வியாபம் என சுருக்கமாக கூறப்படுகிறது.
கடந்த 2013ம்ஆண்டு வியாபம் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போது ஏராளமானவர்கள் முறைகேடாக பணி நியமனம் பெற்றது தெரிய வந்தது.
இந்த ஊழல் வழக் கை சிறப்பு விசாரணைக்குழு விசாரணை செய்து வருகிறது.இந்த விசாரணையின் நம்பகத்தன்மை இருக்காது. சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. வியாபம் ஊழல் வழக்கு விசாரணை நடந்துவரும் நிலையில் மர்மமான முறையில் 49பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக் விஜய சிங் நேற்று கூறியதாவது,
வியாபம் ஊழல் வழக் கை உச்ச நீதிமன்றம் நியமிக்கும் சிறப்பு விசாரணைக்குழுமேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்.கடந்த 2013ம்ஆண்டு இந்த ஊழல் வெளியே தெரிய வந்தது.அப்போது இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த தொடங்கி இருந்தால் தற்போது இந்த வழக்கில் முடிவு கிடைத்திருக்கும். பண பலம் வாய்ந்த நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள்.மத்திய பிரதேச தொழில் நுட்ப கல்வி வாரியத்தில் லஞ்சம் அளித்தால்தான் வேலை கிடைக்கும் என்று அப்பாவி மக்கள் எண்ண துவங்கிவிட்டனர்.அதனால் தான்அவர்கள் லஞ்சம் அளித்து வேலை பெற்றிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து