முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைநகர் டெல்லியில் அடைமழை

சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஆக.13 ​ தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகர் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வடமாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் யமுனா,பிரமபுத்திரா, கங்கை ஆகிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மட்டும் 70 மி.மீ. மழை பெய்துள்ளது. மழை நேற்று காலையிலும் தொடர்ந்து பெய்து கொண்டியிருந்தது. வெப்பநிலை 25.5 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இந்த வருடத்தில் இதுதான் குறைந்த வெப்பநிலையாகும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நகரின் பல இடங்களில் மழை வெள்ளம் தேங்கியிருப்பதால் மோட்டார் வாகனங்கள் மட்டுமல்லாது நடந்து செல்பவர்களாலும் முடியவில்லை. இதனால் போக்குவரத்து நேற்று அடியோடு ஸ்தம்பித்தது. நியூ ப்ரண்ட்ஸ் காலனி, ஆஹ்லா, எம்.பி.ரோடு, லட்சுமி நகர், விகாஸ் மார்க், ஆஜாத்பூர் மார்கெட் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதித்தது. டிஎன்டி பாலம், மோரி கேட் காஷ்மீரி கேட் மெட்ரோ ஸ்டேஷன், ஐடிஓ ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. மழை தொடர்ந்து பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்