முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரத்திற்கு ராக்கி கட்டிய பீகார் முதல்வர் நிதீஷ்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஆக.14 - ரக்ஷாபந்தன் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஒரு மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார். நாடு முழுவதும் நேற்று ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்பட்டது. சகோதர பாசத்தை வலியுறுத்தும் வகையில் நடக்கும் இந்த விழாவின்போது ஒருவருக்கொருவர் ராக்கி கயிறு அணிந்துகொள்வது வழக்கம். சகோதரிகள் சகோதரர்களுக்கு தங்கள் அன்பின் வெளிப்பாடாக ராக்கி கயிறை அவர்களின் கைகளில் அணிவித்து மகிழ்வார்கள். ஆனால் ஒரு அரிய நிகழ்ச்சியாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் பாட்னாவில் உள்ள ஒரு மரத்திற்கு ராக்கி கயிறு அணிவித்து விழா நடத்தினார். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் மரத்திற்கு ராக்கி கயிறை கட்டியதாக நிதீஷ்குமார் கூறினார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும், பீகார் மாநிலத்தை பசுமை மாநிலமாக மாற்ற வேண்டும். அதற்காக பீகார் மக்கள் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று நிதீஷ்குமார் கேட்டுக்கொண்டார். பூமியையும் மனித இனத்தையும் காப்பாற்ற இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இவரைத் தொடர்ந்து துணை முதல்வர் சுசில்குமார் மோடி ஒரு மரத்தின் அடிப்பகுதியில் பருத்தி துணியினால் ஆன மிகப்பெரிய ராக்கி கயறு ஒன்றை கட்டினார். 

ராஜ்தானி வாட்டிகா பூங்காவில் இந்த விழா நடைபெற்றது. ரக்ஷாபந்தன் அன்று இந்த பூங்காவிற்கு அனைவரும் இலவசமாக வந்து செல்லலாம் என்று சுசில்குமார் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்