முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2016      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் வருகிற ஏப்ரல் 10ம் தேதியன்று நடக்கிறது. இதுகுறித்து, மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில் செயல் அலுவலர்நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சித்திரை திருவிழாவையொட்டி, தேர் தயார் படுத்தும் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வருகிற 18ம்தேதியன்றுநடக்கிறது. பின்னர் ஏப்ரல் 9ம்தேதியன்று,மாலையில் வாஸ்து சாந்தியும் 10ம்தேதி காலை 10.30மணிமுதல் 10.54க்குள் கோவில் கம்பத்தடி மண்டபத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

இத்திருவிழா காலங்களில்தினசரி மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் சிறப்பு வாகனங்களில் உலா வந்து அருள்பாலிக்கிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 17ம்தேதியன்று இரவு 7.40 மணிக்குள் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. 18ம்தேதி இரவு கீழமாசி வீதி-வடக்கு மாசி வீதி சந்திப்பு பகுதியில் திக்விஜயமும் 19ம்தேதி காலை மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

இந்த திருக்கல்யாணத்தை 10ஆயித்துக்கும் மேற்பட்டோர் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்பின்னர் ஏப்ரல் 20ம்தேதியன்றுகாலை மாசி வீதிகளில் தேரோட்டமும்,21ம்தேதியன்று தேர் தடம்பார்த்தல் நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது. மீனாட்சியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் நிறைவடைந்தபின்னர், ஏப்ரல் 20ம் தேதியன்று கள்ளழகர் கோவிலில்இருந்து, சுந்தரராஜபெருமாள் மதுரைக்கு பல்லக்கில் புறப்படுகிறார். 21ம்தேதியன்று மூன்று மாவடியில் எதிர் சேவை நிகழ்ச்சி நடக்கிறது. 22ம்தேதி காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்