முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் மும்மடங்கு உயர்வு

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

கலிபோர்னியா  - சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு வருமானம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் பேஸ்புக் நிறுவனத்தின் நிகர லாபம் மும்மடங்கு உயர்ந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம் மும்ம‌டங்கு லாபம் பெற்றதன் மூலம் நடப்பாண்டில் மிகச்சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளதாக அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேலும், பேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை 15 சதவிகிதம் அதிகரித்து 1.65 பில்லியனை எட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் தினமும் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் 16 சதவீதம் அதிகரித்து 1.09 பில்லியனாக உயர்ந்துள்ளது.  மக்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பேஸ்புக், தற்போது தனது சேவையை விரிவாக்கி வருகிறது. செய்திகள், லைவ் வீடியோ என்று தனது வாடிக்கையாளர்களை கவர மேற்கொண்ட முயற்சிகள் நல்ல பலனை அளித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்