முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வராக பதவியேற்ற மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 27 மே 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - மேற்கு வங்காள சட்டசபைக்கு நடந்த தேர்தலில் அபார வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மந்திரிசபை  பதவி ஏற்றுக்கொண்டது. மம்தா பானர்ஜி தொடர்ந்து 2-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற சிறிது நேரத்தில், பிரதமர் நரேந்திரமோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, பதவி ஏற்றுக்கொண்ட மம்தா பானர்ஜிக்கும், அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்காக நெருக்கமாக இணைந்து செயல்படுவதில் நாங்கள் ஆவலாய் இருக்கிறோம் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்