முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய நேரடி முதலீடு விதிமுறைகளை அரசு தளர்த்தியது- பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக்கூட்டத்தில் முடிவு

திங்கட்கிழமை, 20 ஜூன் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மருந்துப்பொருட்கள், பாதுகாப்புத்துறை, மக்கள் போக்குவரத்துத்துறைகளில் அன்னிய நேரடி முதலீடுகளை செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு தளத்தியது . இதனால் இந்த துறைகளில் அதிக அளவில் அன்னிய நேரடி முதலீடுகள் குவிவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்தது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்னிய நேரடி முதலீடுகளை இந்தியாவின் உள்கட்டமைப்புத்துறைகளில் அதிக அளவில் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி  எண்ணெய் வளம் மிக்க வளை குடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகிறார்.

 இந்த நிலையில் அயல் நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை செய்வதற்கான சில தடைகள் உள்ளதாக குறிப்பிட்டு வந்தன. இந்த குறைபாடுகளை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு சீரமைக்கும் என்று பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்களின் போது அந்த நாட்டு  தொழிலதிபர்களிடம் உறுதியளித்து இருந்தார்.

இந்த நிலையில் மருந்துப்பொருட்கள், பாதுகாப்புத்துறை, மக்கள் விமானப்போக்குவரத்து ஆகியவற்றில் அன்னிய நிறுவனங்கள் நேரடி முதலீடு செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது.

  மேலும்,உணவுப்பொருட்களில் இ-காமர்ஸ், ஒலிபரப்புத்துறை சேவைகள், தனியார் பாதுகாப்பு எஜென்சிகள் மற்றும்  விலங்கு கால்நடைத்துறை ஆகியவற்றில் அன்னிய நேரடி முதலீடுகள் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

 இந்தியாவில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுவடையவும் இந்த முடிவுகளை  பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று முடிவு செய்துள்ளது என அரசு தெரிவித்தது.

அன்னிய முதலீடு விஷயத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோடி தலைமையிலான அரசு விதிமுறைகளை தளர்த்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து அந்தத்துறையில்  2வது சீரமைப்பை மத்திய அரசு தற்போதுமேற்கொண்டிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago