முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் கார்களுக்கு நாடு முழுவதும் தடை விதிப்பது பெரு நிறுவனங்களுக்கான மரண தண்டனை: டொயட்டோ வேதனை

வியாழக்கிழமை, 28 ஜூலை 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  -  டீசல் வாகனங்களுக்கு  நாடு முழுவதும் தடை விதிக்க ஆலேசனை செய்வது பெரு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மரண தண்டனையாகவே உள்ளதுஎன தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பெரு நிறுவனம் டொயட்டோ தெரிவித்தது-  டீசல் வாகனங்களால், காற்றில் மாசு ஏற்படுவது அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு சுவாசப்பிரச்சினை போன்ற நோய்களும் ஏற்படுகின்றன. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்கு நாடு முழுவதும் டீசல் வாகனங்களை தடை செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது. 

இந்த ஆலோசனையின் படி  டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டால் இது பெரு நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் பெரு  மரணதண்டனையாக இருக்கும் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் டொயட்டோ நிறுவனம் தெரிவித்தது. டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பது உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இழைக்கப்படும் அநீதியான நியாயமற்ற நடவடிக்கை என்றும் அது தெரிவித்தது.

இந்த முறையீடு தொடர்பான, விசாரணை வருகிற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதியன்று தேசிய பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஸ்வந்தர் குமார் முன்னிலையில் வருகிறது. இது தொடர்பான வழக்கை டெல்லி காற்று மாசு கட்டுப்பாடு அமைப்பின் வழக்கறிஞர் வர்த்தமான் கவுசிக் பதிவு செய்துள்ளார்.  இதற்கு முன்னர், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த முந்தைய உத்தரவில் டீசலில் ஓடும் எஸ்.யு.வி. வாகனங்கள் மற்றும் கார்கள் 2ஆயிரம் சி.சி. என்ஜின் திறனுக்குமேல் இருந்தால் அதனை தேசிய தலைநகர் டெல்லியில் பதிவு செய்யக்கூடாது  என தெரிவித்து இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்