முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் டி.வி. விவாதங்களில் பங்கேற்க 5 பேர் நியமனம்: சரத்குமார் அறிவிப்பு

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் டி.வி.விவாதங்களில் பங்கேற்க 5 பேரை நியமனம் செய்து சரத்குமார் அறிவித்துள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

தொலைக்காட்சிகளில் நடைபெறும் அரசியல் மற்றும் சமுதாய பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் சமத்துவ மக்கள் கட்சிசார்பில் பங்கேற்க 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1, கட்சியின் அரசியல் ஆலோசகர் வன்னிமலை 2. மாநில இளைஞர் அணி- மாணவர் அணி செயலாளர்- சாமுவேல் மேத்யூ, 3. மாநில மகளிர் அணி துணை செயலாளர் பாகீரதி, 4.கலை இலக்கிய அணி துணை செயலாளர் ராஜேந்திரன், 5. சென்னை மண்டல செயலாளர் சேவியர்.

இவர்களை கட்சியின் மாநில மகளிர் அணி துணை செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் பாகீரதி மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்